மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து 16ஆவது நாளகாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, டிச.12ஆம் தேதி டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலைலுள்ள சுங்கச்சாவடிகளை ஆக்கிரமிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயம், தொழிற்ச்சங்கங்கள் அழைப்பு விடுத்ததிருந்தன.அதன்படி, டெல்லியின் எல்லையில் உள்ள நெடுஞ்சாலை, பிக்கெட் சுங்கச் சாவடிகளை போரட்டகாரர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.
இதனால், சுங்கச்சாவடிகளைப் பாதுகாப்பதற்கும், சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பதர்பூர் எல்லை, குருகிராம் ஃபரிதாபாத், குண்ட்லி-காஜியாபாத்-பல்வால், பாலி க்ரஷர் மண்டலம் ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளில் மூன்றாயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் அர்பிட் ஜெயின் கூறுகையில், "அந்தந்த காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், ரிசர்வ் படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். 'ட்ரோன்' கேமரா மூலம் நிலைமையை கண்காணித்து வருகிறோம். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம், எந்த வகையிலாவது சட்டம் ஒழுங்குமீறப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.
இன்னும்பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிறுத்துமாறு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க:விவசாயிகள் போராட்டம்: குழுத் தலைவர்களுடன் ரகசியம் பேசிய அமித் ஷா!