தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் விவசாயிகள் மூன்று பேர் பூர்விக நிலம் தொடர்பாக அரசு அலுவலரை சந்திக்கச் சென்றனர். நிலம் தொடர்பாக ஆன்லைனில் பதிவேற்றும்போது அரசு அலுவலர்கள் தவறு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதற்கு அரசு அலுவலர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
விவசாயிகளை மிரட்டும் அரசு அலுவலர் - வைரல் வீடியோ! - காலில் விழுந்து கெஞ்சும் காட்சி
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் நில விவகாரம் தொடர்பாக அரசு அலுவலரின் காலில் விழுந்து விவசாயிகள் கதறும் வீடியோ வைரலாகி வருகிறது.

FARMER BEGGING
விவசாயிகள், அலுவலரது காலில் விழும் காட்சி!
இந்நிலையில் நிலத்தை வேறு ஒருவர் பெயரில் தவறுதலாக பதிவேற்றம் செய்துள்ளனர் என்று விவசாயிகள் அலுவலரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அலுவலர், விவசாயிகள் மீது பொய்வழக்கு போடப்போவதாக மிரட்டியுள்ளார். பின்னர், நிலத்தை ஒப்படைத்துவிடுங்கள் என்று விவசாயிகள் அலுவலரது காலில் விழுந்து கதறும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.