தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளுநர் மாளிகை முன்பு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்! - ஆளுநர் மாளிகை முன்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: விவசாயத்தை சீரழிக்கும், வணிக ஒப்பந்தம் கையெழுத்திடுவதை இந்தியா கைவிட வேண்டும் என்று புதுச்சேரி விவசாயிகள் சங்கத்தினர் ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

farmers association

By

Published : Nov 4, 2019, 8:20 PM IST

புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆளுநர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரவி தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும் ரீஜினல் கான்பரகென்சிவ் எக்கனாமிக்கல் பார்ட்னர்ஷிப் எனும் தடையில்லா வணிக ஒப்பந்தம் இன்று ஆசிய நாடுகளில் உள்ள 16 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த அக்டோபர் 19, 21 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய குழு கூட்டத்தில் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் எதிர்ப்பு நாள் நவம்பர் 4ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவித்திருந்தது.

விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதனடிப்படையில் புதுச்சேரியில் இன்று மாநில விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேரு வீதி, மிஷின் வீதி சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை அருகே உள்ள தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: விஷவண்டு தாக்கி புதுச்சேரி அதிமுக செயலாளர் உயிரிழப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details