தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகள் தற்கொலை பற்றி பல மாநில அரசுகள் முறையாக தகவல் அளிப்பதில்லை - மத்திய உள்துறை இணை அமைச்சர் - 2018ஆம் ஆண்டில் வேளாண் துறையைச் சேர்ந்த 10 ஆயிரத்து 357 பேர் தற்கொலை

விவசாயிகள் தற்கொலைப் பற்றிய தகவல்களை பல மாநில அரசுகள் அளிப்பதில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

Home Ministry
Home Ministry

By

Published : Sep 21, 2020, 4:10 PM IST

நாட்டில் விவசாயிகள் தற்கொலை குறித்த விவரங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் பதிலளித்தார். அதில் அவர், நாட்டில் நிலவும் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் மூலம் தெரிந்துகொள்ளலாம். அந்த புள்ளிவிவரத்தில் பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் மாநிலங்கள், பிரதேசங்களில் விவசாயிகள் தற்கொலை குறித்த விவரங்களை பூஜ்ஜியமாக தெரிவிக்கின்றன.

மாநில அரசுகள் தற்கொலைகள் குறித்து உரிய விவரங்களை தராத நிலையில், விவசாயிகள் தற்கொலை குறித்து மத்திய அரசு தேசிய புள்ளவிவரத்தை தனியாக வெளியிட முடியவில்லை என பதிலில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2018ஆம் ஆண்டில் வேளாண் துறையைச் சேர்ந்த 10 ஆயிரத்து 357 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2019ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 281ஆக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த தற்கொலைகளில் 7.4 விழுக்காடு வேளாண்துறை சார்ந்தவர்களே உள்ளனர் என அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பிகாரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details