ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கசரனேனி ராஜா. விவசாயத் தொழில் செய்து வரும் இவர், கால்நடைகளை குழந்தையைப் போல் வளர்த்து வந்துள்ளார். இவர் வளர்த்த கால்நடைகள் பல்வேறு மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது.
கடந்த ஒன்பது வருடங்களாக இவர் வளர்த்து வந்த காளை இதுவரை மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் 122 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்த காளை சில நாட்களுக்கு முன்பாக நோய்வாய்பட்டது. அந்த காளைக்கு பல்வேறு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், திடீரென நேற்று உயிரிழந்தது.