கரோனா தொற்று காரணமாக அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்விளைவாக கேரளாவில் விவசாயி ஒருவர் தனித்துவ சிந்தனையுடன் பாக்கு மர மட்டைகளை வைத்து இயற்கை முறையில் முகக்கவசம் தயாரித்துள்ளார்.
பொதுவாக பாக்கு மர மட்டைகளை வைத்து உணவு உண்ணும் தட்டுகளே தயாரிக்கப்படும். இதனையே மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் தலிபரம்பா மழவூரில் வசிக்கும் ஒண்டநாட்டு பாலகிருஷ்ணா என்பவர் இந்த பாக்குமர மட்டைகளை வைத்து முககவசம் தயாரித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு சொந்தமாக பாக்கு மரங்கள் உள்ளன. அதிலிருந்து முகக்கவசங்களை தயாரிக்க நினைத்தேன். கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது முகக்கவசம் கட்டாயமாகத் தேவைப்படுவதால் இவ்வாறு இயற்கை முறையில் தயாரித்து நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
இந்த கவசத்தை கண்ட பிறகு உள்ளூர்வாசிகளிடையே பாக்கு மட்டை தேவை அதிகரித்துள்ளது. மேலும் இதனை தயாரிக்கும் முறைகளை மக்கள் என்னிடம் கேட்டுச் செல்கின்றனர். துணிகள் மூலம் தயாரிக்கும் முககவசத்தோடு ஒப்பிடும்போது இதற்கான தயாரிப்பு விலை பூஜ்ஜியமாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: காவலர்களே சட்டவிரோதமாக மது விற்பனை