தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பெட்ரோல் வாங்கக்கூட காசு இல்லை'- தக்காளியை கால்வாயில் கொட்டிய விவசாயி!

சிக்கோடி: முழு அடைப்பு காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துவரும் இந்நேரத்தில், இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் ஊற்றக்கூட கையில் காசு இல்லாமல், விவசாயி ஒருவர் விளைவித்த தக்காளியை கால்வாயில் கொட்டி அழித்துள்ளார்.

Farmer Destroyed the 120 tons of tomato  120 tons of tomato  1200 கிலோ தக்காளி அழிப்பு  கர்நாடகா, லாக்டவுன், விவசாயி பாதிப்பு, கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, வைரஸ் பாதிப்பு
Farmer Destroyed the 120 tons of tomato 120 tons of tomato 1200 கிலோ தக்காளி அழிப்பு கர்நாடகா, லாக்டவுன், விவசாயி பாதிப்பு, கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, வைரஸ் பாதிப்பு

By

Published : May 2, 2020, 10:48 AM IST

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் கோலி. விவசாயியான அமித், நான்கு ஏக்கர் வயலில் 120 டன் தக்காளி சாகுபடி செய்திருந்தார்.

இதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைத்தது. எனினும், முழு ஊரடங்கு காரணமாக விலைகள் வீழ்ச்சியடைந்திருக்கும் இந்நேரத்தில், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருப்பதால் அவரால் தக்காளியை சந்தைப்படுத்த முடியவில்லை.

இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட அமித், தக்காளியை கால்வாயில் கொட்டியும், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகவும் ஆக்கினார்.

இது குறித்த அமித் கூறுகையில், “ஊரடங்கிற்கு முன் தக்காளி ஒரு கிலோ ரூ.20வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளியின் விலை இரண்டு ரூபாய்கூட இல்லை.

ஒரு விவசாயியால் தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் ஊற்றி, விளைவித்த விவசாய பொருள்களை விற்பனை செய்யக்கூட கையில் பணம் இல்லை. அதனால்தான் வேறு வழியின்றி, தக்காளிகளை அழிக்க முயன்றேன்” என்றார் வேதனையாக.

தக்காளியை கால்வாயில் கொட்டிய விவசாயி!

புதிய வகை கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோய் காரணமாக நாடு முழுக்க மார்ச் மாதம் 22ஆம் தேதியிலிருந்து மூன்று முறை லாக் டவுன் (பூட்டுதல்) நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மே3ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதிக்கு முழு அடைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒன்றரை வயது மகனைப் பிரிந்து, காவல் பணி செய்யும் பெண் சிங்கம்!

ABOUT THE AUTHOR

...view details