தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஃபோனி புயல்: தேர்தல் விதிமுறைகளை விலக்க ஆந்திர முதலமைச்சர் கோரிக்கை - அமராவதி

அமராவதி: ஃபோனி புயலைக் கருத்தில் கொண்டு நான்கு ஆந்திர மாவட்டங்களுக்கு தேர்தல் விதிமுறைகளில் விலக்கு அளிக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

By

Published : May 1, 2019, 11:59 PM IST

இதுகுறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஃபோனி புயல் சுமார் 200 கி.மீ., அசுர வேகத்தில் வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details