வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல், தற்போது ஒடிசாவின் புரி நகரிலிருந்து தென்மேற்கு திசையில் உள்ளது என்றும், இந்த புயலானது 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் ஃபானி புயல்: ஒடிசாவிற்கு மஞ்சள் அலர்ட்! - Indian meteorological center
புவனேஸ்வர்: வங்க கடலில் ஃபானி புயல் அதி தீவிரமடையும் நிலையில், ஒடிசாவிற்கு மஞ்சல் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
![தீவிரமடையும் ஃபானி புயல்: ஒடிசாவிற்கு மஞ்சள் அலர்ட்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3156051-thumbnail-3x2-fanistorm.jpg)
தீவிரமடையும் ஃபானி புயல்: ஒடிசாவிற்கு மஞ்சள் அலர்ட்!
இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் வரும் 3ஆம் தேதி பிற்பகல் ஒடிசாவின் கோபால்புர் மற்றும் சந்த்பாளி இடையே கரையைக் கடக்கும். இதனால் ஒடிசாவின் சில பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஒடிசாவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.
மஞ்சள் அலர்ட் என்பது அடுத்த சில நாட்களுக்கு வானிலை மோசமாக இருக்கும் என்றும், அதற்கான தயார் நிலையில் அந்த பகுதி மக்கள் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பதாகும்.