வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 690 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிர புயலாக வலுப்பெற்று நாளை மாலை ஒடிசாவை நெருங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபோனி புயல்: தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு
டெல்லி: ஃபோனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாட்டுக்கு ரூ. 309.375 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
fani
இந்நிலையில், ஃபோனி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நான்கு மாநிலங்களுக்கு முன் உதவித்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டுக்கு ரூ.309 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.200 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.235 கோடியும் முன் உதவித்தொகையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Last Updated : Apr 30, 2019, 12:53 PM IST