தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2020, 9:01 AM IST

ETV Bharat / bharat

இந்தியரை தாக்கிய நேபாள ஆயுதப்படை காவலர்கள்!

சீதாமர்ஹி (பிகார்): இந்திய- நேபாள எல்லைகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை (ஜூன்-12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு மத்தியில் இந்தியர் ஒருவரை துப்பாக்கியால் தாக்கி நேபாள ஆயுதப்படை காவலர்கள் துன்புறுத்திய சம்பவமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Sangrampur  Nepal  Nepal security forces  NEPAL BORDER  bIHAR NEWS  இந்திய நேபாள எல்லையில் துப்பாக்கிச் சூடு  துப்பாக்கிச் சூடு  லகான் கிஷோர்
Sangrampur Nepal Nepal security forces NEPAL BORDER bIHAR NEWS இந்திய நேபாள எல்லையில் துப்பாக்கிச் சூடு துப்பாக்கிச் சூடு லகான் கிஷோர்

இந்திய- நேபாள எல்லையான லால்பந்தி-ஜான்கிநகர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கடந்த 12-ஆம் தேதி விகேஷ் யாதவ் என்பவர் கொல்லப்பட்டார். உமேஷ் ராம் மற்றும் உதய் தாகூர் ஆகியோர் காயமுற்றனர்.

இந்தச் சம்பவத்தின்போது இந்தியர் லகான் கிஷோர் என்பவர் நேபாள ஆயுதப்படை காவலர்களால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் சனிக்கிழமை (13ஆம் தேதி) இந்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து கிஷோர் கூறுகையில், “நான் எனது குடும்பத்தினருடன் நேபாள எல்லையில் எனது மருமகளை காண காத்திருந்தேன். அவர் அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராவார்.

அப்போது துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்து வேகவேகமாக இந்திய எல்லைக்குள் ஓடி வந்தேன்.

அங்கு என்னை நேபாள காவலர்கள் பிடித்தனர். பின்னர் நேபாளத்தின் சங்ராம்பூருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது என்னை ஒருவர் துப்பாக்கியால் தாக்கினார். மேலும் நேபாளத்திலிருந்து கைது செய்து வருவதாக ஒப்புதல் அளிக்கும்படி வற்புறுத்தினார்கள்” என்றார்.

லகான் கிஷோரின் மகனும் தனது தந்தை நேபாள காவலர்கள் துன்புறுத்தப்பட்டார் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “பாதுகாப்பு படையினர் எங்களை அவமதித்தார்கள். ஆனால் அவர்களின் மொழியை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இருப்பினும், என் சகோதரனின் மனைவி அவர்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு, அவர்கள் இந்திய தரப்புக்கு வந்து என்னை அடித்தார்கள். இதை நான் எனது தந்தையிடம் கூறினேன்” என்றார்.

மேலும், அவரை தாக்கிக் கொண்டே அவரது தந்தையை இந்தியப் பகுதியிலிருந்து பிடித்து சென்றதாகவும் லகானின் மகன் கூறினார். லகான் கிஷோர் கடந்த 13-ஆம் தேதி இந்திய பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: துப்பாக்கிச் சூடு சம்பவம்: இந்தியரை விடுவித்த நேபாளம்!

ABOUT THE AUTHOR

...view details