கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 வயது ஆண் உட்பட அவரின் பெற்றோருக்கு நடத்திய பரிசோதனையில் மூவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் சிறிது நாட்களுக்கு முன்புதான் சென்னை சென்று திரும்பியுள்ளனர். இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர்கள் மூவரும் பரிசோதனை மேற்கொண்டபோது கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் இடுக்கி, வயநாடு பகுதிகளில் கரோனா எண்ணிக்கை குறைவாகத்தான் இதுவரை உள்ளது. இருப்பினும், மூணாறில் சுகாதார ஊழியர்கள் அதிகம் பேர், மிகவும் நெருக்கமான வீடுகளில் அருகாமையிலேயே வசித்து வருகின்றனர்.