தமிழ்நாடு

tamil nadu

கல்லறை வளாகத்தில் வசிக்கும் குடும்பம்

புதுச்சேரி: கல்லறை வளாகத்தில் பல ஆண்டுகளாக குழந்தைகளுடன் பயமின்றி வாழ்க்கை நடத்தும் குடும்பம் தரமான கான்கிரீட் கட்டடம் கோரியுள்ளனர்.

By

Published : Jan 6, 2020, 10:07 AM IST

Published : Jan 6, 2020, 10:07 AM IST

Updated : Jan 6, 2020, 10:24 AM IST

ETV Bharat / bharat

கல்லறை வளாகத்தில் வசிக்கும் குடும்பம்

கல்லறையில் குடும்பம்
கல்லறையில் குடும்பம்

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள தென்னஞ் சாலை செல்வந்தர்கள் வாழும் பகுதியாக திகழ்ந்து வருகிறது. ஆனால், அப்பகுதியில் அமைந்துள்ள கல்லறை வளாகத்தில் ஒரு குடும்பம் பல வருடங்களாக வசித்து வருகிறது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து மேலும் விசாரித்ததில், இடுகாட்டில் சடலங்களுக்கு குழி வெட்டும் தொழில் செய்துவரும் காமாட்சி குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வசிப்பதற்கு வீடு இல்லாமல் இடுகாட்டில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இடுகாட்டிலேயே விறகு அடுப்பில் சமைத்து சாப்பிடுகின்றனர்.

கல்லறைகளுக்கிடையே பல ஆண்டுக் காலமாக குழந்தைகளுடன் பயமின்றி வாழ்க்கை நடத்தும் குடும்பம்

இதுகுறித்து இக்குடும்பதினைச் சேர்ந்த பள்ளி மாணவி சௌமியா கூறுகையில்," அரசுப் பள்ளியில் ஒன்பதாவது படிக்கிறேன். எனது தாத்தா காலத்திலிருந்து இந்தச் சுடுகாட்டிலேயே வாழ்ந்து வருகிறோம். மேலும் எங்கள் குடும்பத்தினைச் சேர்ந்த பிள்ளைகள் இந்த வளாகத்திலேயே விளையாடி வருகிறோம். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் எங்களுக்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடுகாடு முழுவதும் விளையாட்டு களம் தான் என்றார். சமூக அமைப்பு மூலம் எதேனும் உதவி கிடைத்தால் தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த ஏதுவாகும் என்று கோருகின்றனர் காமாட்சி குடும்பத்தினர்.

இதையும் படிங்க: குடியிருப்பு பகுதியில் சாரைப் பாம்புகள் களியாட்டம்!

Last Updated : Jan 6, 2020, 10:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details