தமிழ்நாடு

tamil nadu

குடியுரிமையை புதுப்பிக்க தங்கள் வருவாயையே இழக்கும் குடும்பம்!

By

Published : Aug 9, 2019, 5:32 PM IST

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் வருமானம் குடியுரிமை வரைவு தேசிய பதிவு (NRC) செய்வதற்கே செலவாகிறது.

குடியுரிமை பெற தங்களனின் குடும்ப வருமானத்தையே இழக்கும் குடும்பம்!

அஸ்ஸாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தில் வசிப்பவர் மஹரேஷ் அலி. கூட்டுக் குடும்பமாக இருக்கும் இவரது குடும்பத்தின் உறப்பினர்கள் மொத்தம் நூறு பேர். இவர்கள் 100 பேரும் குடியுரிமையை புதுப்பிப்பதற்காக அவ்வப்போது குடியுரிமை வரைவு தேசிய பதிவில் பதிவு செய்துவருகின்றனர். இதற்காக அவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தையே இழந்துவருகின்றனர்.

மஹரேஷ் அலியின் தந்தை ஷஹாபுதினுக்கு ஐந்து மனைவிகள் இருப்பதால், இவரது குடும்பம் 100 உறுப்பினர்களுடன் பெரிய குடும்பமாக இருக்கிறது.

குடியுரிமையை புதுப்பிக்க தங்கள் வருவாயையே இழக்கும் பெரிய குடும்பம்

அதுமட்டுமின்றி இவர்கள் ஒவ்வொரு முறை குடியுரிமையை புதுப்பிப்பதற்கு செல்லும்போது பேருந்து பிடித்துதான் செல்கின்றனர். இதனால் அவர்களின் வருவாயில் முக்கால்வாசி குடியுரிமையை புதுப்பிக்கவே செலவாகிறது. தற்போதுவரை இவர்கள் ஏழு முறை குடியுரிமையை புதுப்பித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details