நாடு முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் முறையான அனுமதியுடன் பாஸ் பெற்றுதான் பயணம் மேற்கொள்ள முடியும் என்றக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வழங்கப்படும் இந்த பாஸ்களை டெல்லியைச் சேர்ந்த ஒரு கும்பல் போலியாக தயாரித்து விற்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை துணை ஆணையர் அலுவலக இணையத்தை ஹேக் செய்து அதன் மூலம் இந்த கும்பல் போலி பாஸ்களை கடந்த ஒருவாரமாக தயாரித்து வந்ததை டெல்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளது.