தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலி சான்றிதழ்களைப் பயன்படுத்திய கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ்! - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகம் பெயரில் தங்கக் கடத்தல்

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உயர் பதவிக்காக போலி கல்விச் சான்றிதழ்களை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

fake-certificate-case-kerala-police-all-set-to-record-swapna-sureshs-arrest
fake-certificate-case-kerala-police-all-set-to-record-swapna-sureshs-arrest

By

Published : Jul 30, 2020, 8:24 PM IST

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டவழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், தற்போது விசாரணைக்காக சுங்கத்துறை காவலில் உள்ளார்.

இவர் இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக கருதப்படுகிறார்.

இதற்கிடையில், அவர் போலி கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி உயர் பதவிகளைப் பெற்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரத்திலுள்ள கன்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணையை காவல் துணை ஆணையர் சுனீஷ் பாபு விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்திலிருந்து ஸ்வப்னா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தூதரகத்தின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப செயலரான சிவசங்கரின் பரிந்துரையின் பேரில், இவர் மாநில தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் விண்வெளி பூங்காவில், செயல் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பணியில் சேர்வதற்காக இவர், மகாராஷ்டிரா தாதா சாஹிப் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வர்த்தகம் பயின்றதாக சான்றிதழ்களை அளித்துள்ளார். ஆனால் அவரது பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என்று ஊடகங்களில் வந்த செய்திகளைத் தொடர்ந்து, கேரள மாநில தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு அமைப்பு ஸ்வப்னா மீது புகார் அளித்தது.

இந்தப் புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில் ஸ்வப்னாவின் சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை முடிந்த பிறகு போலி சான்றிதழ்கள் குறித்த விசாரணை நடைபெறும் அல்லது அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான அனுமதி பெற்றவுடன் இது குறித்து தொடர் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details