மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும் அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
”கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நாளும் விடாமல் பணி செய்து வருகிறேன். தற்போது கடவுள் என்னை இடைவேளை எடுக்க வைத்துள்ளார்” என அவர் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
தான் மருத்துவர்களின் அனைத்து அலோசனைகளையும் பின்பற்றி வருவதாகவும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, விரைவில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளாரக பட்னாவிஸ் செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் மகாராஷ்டிரா, பிகார் மாநிலங்களிடையே தொடர்ச்சியாகபயணம் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாஜகவிலிருந்து மேலும் பலர் விலகலாம் - ஏக்நாத் காட்சே தகவல்