தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தவ் எனக்கு சகோதரர் மாதிரி! உருகிய மகாராஷ்டிர முதலமைச்சர் - மகாராஷ்டிரா

மும்பை: உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மூத்த சகோதரர் என சிவ சேனா கட்சியின் கூட்டத்தில் அழைத்துள்ளது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

uddhav

By

Published : Jun 20, 2019, 8:59 AM IST

சிவ சேனா கட்சி தனது 53ஆவது ஆண்டு தொடக்க விழாவை நேற்று கொண்டாடியது. இதில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் பேசிய பட்னாவிஸ், "இந்த விழாவில் நான் ஏன் அழைக்கப்பட்டேன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நான் இந்த விழாவில் பாபா சாகேப் தாக்கரேவின் ஆசீர்வாதத்தைப் பெறவும், உத்தவின் அன்பைப் பெறவும்தான் இங்கு வந்துள்ளேன்.

நாட்டின் மிக நீண்ட நாட்கள் தொடர்ந்து கூட்டணியில் இருப்பது பாஜக - சிவ சேனாவும்தான். ஒரே வீட்டில் இரு சகோதரர்கள் வாழ்ந்தால் கருத்து வேறுபாடு வரத்தான் செய்யும். ஆனால் இரு கட்சியினரும் தங்களின் கருத்து வேறுபாட்டினை கலைந்து ஒன்றாக வேலை செய்துள்ளோம்" என்றார்.

சிவ சேனா ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியினரைத் தவிர வேறு யாரையும் அழைப்பதில்லை. ஆனால் முதன் முறையாக வேறு கட்சியைச் சேர்ந்தவரை அழைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details