தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்று கொண்டார். தனிப்பெரும்பான்மை இல்லாதபோதிலும் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயக விரோத செயல் என பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர். இதற்கு மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான ஆனந்த் குமார் ஹெக்டே பதிலடி தந்துள்ளார்.
இதுகுறித்து அவர், "பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக 80 மணி நேரங்கள் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். பின்னர் அவர் ராஜினாமா செய்தார். ஏன் அவர் இந்த நாடகம் ஆட வேண்டும்? பெரும்பான்மை இல்லாதது எங்களுக்கு தெரியாதா? ஆனாலும் அவர் முதலமைச்சரானார். இந்த கேள்வியைதான் அனைவரும் கேட்கின்றனர்.