மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும் சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ். கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது. சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 29 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் முதலமைச்சர் பதவி குறித்த விவகாரத்தில் அக்கட்சிக்கும் சிவசேனாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவிவருகிறது.