தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலைக்குழு முன்பாக ஆஜரான ஃபேஸ்புக்கின் இந்திய சி.இ.ஓ!! - முகநூல்

டெல்லி : பாஜக மற்றும் இந்துத்துவ ஆற்றல்களுக்கு ஆதரவாக முகநூல் செயல்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் நாடாளுமன்ற நிலைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நிலைக்குழு முன்பாக ஆஜரான பேஸ்புக்கின் இந்திய தலைவர்!
நிலைக்குழு முன்பாக ஆஜரான பேஸ்புக்கின் இந்திய தலைவர்!

By

Published : Sep 2, 2020, 9:56 PM IST

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகத்தளங்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்க டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் இந்தியா முழுவதும் பெரும் பிரச்னையாக வெடித்தது. அரசியல் களத்தை பரபரப்பாக்கிய இது குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸின் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு முடிவெடுத்தது.

அதனடிப்படையில், "குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சமூக / ஆன்லைன் செய்தி ஊடகத் தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. முகநூல் நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் இன்று (செப்டம்பர் 2) பிற்பகல் குழு முன் ஆஜராகி தனது கருத்துக்களை தெரிவித்தார்.

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் இத்தகைய செயல்பாடுகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details