தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏழு ஆண்டுகள் கழித்து ஃபேஸ்புக் மூலம் கிடைத்த சிறுவன்! - bhopal

போபால்: காணாமல் போன ஒன்பது வயது சிறுவன் ஏழு ஆண்டுகள் கழித்து ஃபேஸ்புக் மூலம் தனது பெற்றோருடன் இணைந்துள்ளார்.

facebook-helps-reunite-missing-boy-with-his-family-after-7-years

By

Published : Jun 18, 2019, 1:20 PM IST


கடந்த 2013ஆம் ஆண்டு பவன் குமார் ஓஜா என்பவர் தனது 9 வயது மகனைக் காணவில்லை என மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள ராவ்ஸர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஓஜா தன் மகனை தீவிரமாக தேடி வந்துள்ளார். பல இடங்களில் தேடியும் அவரால் கண்டுப்பிடிக்க இயலவில்லை. அதன்பின் தனது நம்பிக்கையை இழந்த அவர், தேடுவதைக் கைவிட்டுள்ளார்.

பிறகு பேஸ்புக்கில் பதிவிட்ட தகவலின் உதவியால் கடந்த ஞாயிற்றுக்கிழை தனது பெற்றோரிடம் வந்து சேர்ந்தார் அன்ஷுல்.

பின்பு ஊடகங்களிடம் பேசிய அன்ஷுல், "நான் கடத்தப்பட்டு, தில்லிக்கு இரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டேன். இதனை அறிந்த நான் ரயிலிலிருந்து இறங்கி அங்குள்ள காவல் அலுவலர்களிடம் தொலைந்துவிட்டதாக தெரிவித்தேன். என்னால் அவர்களிடம் சரியான முகவரியை தெரிவிக்க முடியவில்லை அதனால், என்னை பாட்னா நலன்புரி சமூகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். என் விவரங்களை அச்சமூகத்தின் நிர்வாகி பேஸ்புக்கில் பதிவிட்டார். எனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு பெரிதும் உதவி செய்துள்ளார்" என்றுக் கூறினார்.

தொலைந்துபோன மகன் ஏழு ஆண்டுகள் கழித்து தந்தையர் தினத்தென்று கிடைத்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார் ஓஜா.

ABOUT THE AUTHOR

...view details