இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனாவின் அழைப்பின்பேரில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை அந்நாட்டிற்குச் செல்லவுள்ளார்.
இலங்கை செல்லும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்! - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
டெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை செல்லவுள்ளார்.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நாளை (ஜன. 5) இலங்கை செல்லவிருக்கும் அவர் ஜனவரி 7ஆம் தேதி திரும்பவுள்ளார். இருநாட்டு உறவை வலுப்படுத்தும் வகையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்தாண்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அதேபோல், இந்தாண்டு இலங்கைக்குச் செல்லும் முதல் வெளிநாட்டு அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார். இதன்மூலம், பரஸ்பர நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலான இந்தப் பயணம் இருநாட்டு உறவை மேலும் பலப்படுத்த உதவும்.