ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெஹகபூபா முப்தியின் மீது தொடுக்கப்பட்ட பொதுப்பாதுகாப்புச் சட்டத்தை நீட்டித்து தொடர்ந்து அவரை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசமைப்பு உறுதிசெய்துள்ள உரிமை மீது தாக்குதல் நடத்தும் செயல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
61 வயதான மெஹபூபா முப்தி, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் தானும் ஒருவன். அதனால், தானும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நபரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.