வரும் நவம்பர் 30ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து மேற்கொள்ள அனுமதி தேவையில்லை.
கோவிட்-19: ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை நீட்டிப்பு - India corona lockdown
16:01 October 27
முதியோர், சிறுவர், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியே வர வேண்டாம். மத்திய அரசுடன் ஆலோசிக்காமல் மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளக் கூடாது' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு தொடரும் எனவும் அங்கு அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த தடை விதித்தும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த மாதத்திற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:பிகார் மக்கள் சிராக் பாஸ்வானை நம்ப மாட்டார்கள் - அனுராக் தாக்கூர்