பிரிட்டனில் மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில், அந்நாட்டுடனான பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடையை நீட்டிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரிட்டன் நாட்டுடனான பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அந்நாட்டில் தீவிரமான சூழல் நிலவிவரும் நிலையில், அந்தத் தடையை ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்க மத்திய அரசிடம் கோரிக்கைவிடுக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.