தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாம் எண்ணெய் கிணற்றில் விபத்து

திஸ்பூர்: அசாமில் உள்ள பாக்ஜன் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நிபுணர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அசாம்
அசாம்

By

Published : Jul 22, 2020, 4:19 PM IST

அசாம் மாநிலம் பாக்ஜனில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த மூன்று நிபுணர்கள் இதில் சிக்கியதில் அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட தீயை அணைக்கும்போது வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மே 27ஆம் தேதியிலிருந்து, தின்சுகியா மாவட்டம் பாக்ஜனில் உள்ள ஐந்தாவது எண்ணெய் கிணற்றிலிருந்து வாயு வெளிப்பட்டுவருகிறது. இந்த பகுதியில் ஜூன் 9ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டதில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். விபத்திலிருந்து வெளிப்பட்ட ரசாயன பொருள்கள் விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த தீயை அணைக்கத் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டிலிருந்து நிபுணர் குழு வரவழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 9,000 பேர் அரசின் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பணியாளர்கள் செய்த தவறினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் வழிகாட்டுதல்களை ஒழுங்காக பின்பற்றியிருந்தால் இதனை தவிர்த்திருக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை: பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details