கரோனா தொற்றால் மக்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் மதிப்பிடுவதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் சார்பாக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் நிபுணர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய கொள்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும். இதன் மூன்றாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று வீடீயோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சுரஜித் டே தலைமையில் நடந்தது.
இந்த நிபுணர்கள் குழு, கரோனா வைரஸ் மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி ஆய்வு செய்துவருகிறது. தற்போது இக்குழு குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை ஒவ்வொரு மாநிலங்களும் எப்படி கையாண்டது என ஆய்வு செய்துவருகிது.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒரே வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசுக்கு இக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல் குடிபெயர்ந்த பெண் ஒருவருக்கு சாலையில் பிரசவம் நடந்தது, சரக்கு ரயில் விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் ஆகியவை தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைக்கு முன்னதாக மத்திய சுகாதாரத் துறை, தொழிலாளர்நலத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, சமூகநலத் துறை, வேளாண் துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களிடமிருந்து அவர்களின் பார்வையையும் பெறவுள்ளது.
மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை வழங்கப்படுவதறகு முன்னதாக பல தரப்பைச் சேர்ந்த நிபுணர் குழுக்களோடு ஆலோசனை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முதலமைச்சரை அவமதித்த நாளிதழை எரிக்க முயன்ற தபெதிகவினர்!