டெல்லி: கனிமொழி போன்று நானும் விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்களால் அவமானங்களை சந்தித்திருக்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு நிகழ்த்தப்பட்ட மரியாதை குறைபாடு பிரச்னை ஒன்றும் சென்னை விமான நிலையத்துக்கு புதிதல்ல. நானும் இதுபோன்று பல நேரங்களில் இந்தி மொழி காரணமாக மரியாதை குறைச்சலாக நடத்தப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசு ஆங்கிலத்தையும், இந்தி மொழியையும் அதிகாரப்பூர்வ தேசிய மொழிகளாக அறிவித்தால், மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் ‘இந்தி மொழி தெரியாதா? நீங்கள் இந்தியனா?’ என்பது போன்ற கேள்விகளை முன்வைப்பது ஏற்றுகொள்ளப்படும்.
செல்போன் சார்ஜரில் மின்கசிவு: தாயுடன் 2 பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு
மத்திய அரசு பதவிகளில் இந்தி அல்லாத மொழி பேசும் ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு இந்தி மொழியைக் கற்கும்போது, இப்பதவிகளுக்கு வரும் இந்தி மொழி பேசும் நபர்கள் ஆங்கிலம் கற்க முடியாமல் திணறுகிறார்களே, ஏன்? என்று சிதம்பரம் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
நீங்கள் இந்தியனா? - கனிமொழியை சீண்டிய விமான நிலைய பெண் காவலர்!
"கனிமொழி ஒரு மக்களவை உறுப்பினர் என்பதால், அதற்குரிய வழிமுறைகளின்படி அவருக்கு விமான நிலையத்தில் தரப்பட்டிருக்க வேண்டிய முன்னுரிமை அல்லது முக்கியத்துவத்தில் ஏதேனும் குறைபாடு எழுந்ததா என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று விமான நிலைய பாதுகாப்பு பொறுப்பு உயர் அலுவலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.