ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் ஆட்சிக் காலம் டிசம்பர் 27ஆம் தேதியோடு முடிவடைவதால் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகவே வந்துள்ளன.
IANS-CVOTER-ABP சார்பாக எடுக்கப்பட்ட கருத்துகணிப்பு:
பாஜக - 32
காங்கிரஸ் கூட்டணி - 35
எஜேஎஸ்யு - 5
ஜேவிஎம் - 2
மற்றவை - 7