மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் இது குறித்தான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற முடிவையே அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ளன.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா
நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 243 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக - சிவசேனா கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் வெற்றிபெறும் என டைம்ஸ் நவ் சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 166 - 194 தொகுதிகள், காங்கிரஸ் கூட்டணி 72 - 90 தொகுதிகள் கைப்பற்றும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.