நாடாளுமன்றம், ராஜபாதை உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 'சென்ட்ரல் விஸ்டா'வை மறுசீரமைப்பு செய்யவுள்ளதாகவும் மத்திய அமைச்சக அலுவலகங்களுக்கான ஒருங்கிணைந்த வளாகத்தை அமைக்கப்போவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கானக் கட்டுமான திட்டத்தை ஹெச்.சி.பி. நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகம் மறுசீரமைப்பு குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் கரண் சிங் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''தற்போது இருக்கும் மிகவும் அழகான, தனித்துவமிக்க நாடாளுமன்ற வளாகத்தைப் போல் மீண்டும் ஒரு நாடாளுமன்ற வளாகத்தை உருவாக்க முடியாது. நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் தேவையில்லாத அலுவலகங்களையும் பொருள்களையும் வெளியேற்றினாலே போதுமான இடம் இருக்கும்.