கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ள கண்காட்சி மையத்தில், 10 ஆயிரத்து 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள், அறிகுறியற்ற நோயாளிகளைத் தனிமைப்படுத்த படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் போதுமான கழிப்பறை, செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் ஓய்வெடுக்கும் அறை, சமையல் கூடம் ஆகியவை உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையமாக மாறிய கண்காட்சி மையம்!
பெங்களூர்: பெங்களூரிலுள்ள சர்வதேச கண்காட்சி மையம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரிய கரோனா சிகிச்சை மையமாக மாறிய கண்காட்சி மையம்
இங்கு தங்கவைக்கப்படும் நோயாளிகளை 150 மருத்துவர்கள் பராமரிப்பார்கள். மேலும், இந்த மையத்தின் ஒரு பகுதியில் வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. காற்றோட்டமாக அமைந்துள்ள இம்மையத்தில் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் மனச்சோர்வு இல்லாமல் பொழுதைக் கழிக்கும் வகையில் திரைப்படம் பார்க்க எல்.இ.டி. திரைப் பொறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனாவை தொடர்ந்து மகாராஷ்டிரா சந்தித்திருக்கும் அடுத்த பேரிடர்!