தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது, விசா குறித்த பிரச்னைகள் ஆலோசிக்கப்படுகிறது - அமெரிக்காவுக்கான இந்திய தூதர் - விசா குறித்த பிரச்னைகள் ஆலோசிக்கப்பட்டுவருகிறது

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை, இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பு தந்து செயல்பட்டுவருகின்றன. உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனாவுக்கு எதிராக பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். இரு நாடுகளில் உள்ள மருத்துவ நிறுவனங்களும் நெருக்கமாக செயல்பட்டுவருகின்றன.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர்
அமெரிக்காவுக்கான இந்திய தூதர்

By

Published : Apr 20, 2020, 12:42 PM IST

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு சம்பவங்களும் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிகரித்துவருகிறது. ஏப்ரல் 18ஆம் தேதி வரை 7,34,000 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 38,800 பேர் நோய் பாதிப்பால் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,900 பேர் உயிரிழந்தனர். பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து நடந்தாலும் நோய் பாதிப்பு குறைந்த மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறக்கோரி போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

கரோனாவால் அங்கு பெரிய அளவில் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்த பேரிடர் காலத்தில், இந்திய தூதரகத்தின் உதவியோடு அமெரிக்க வாழ் இந்திய சமூகம் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு பெரும் ஆதரவோடு உள்ளது. இந்தியர்களுக்கு உதவும் வகையில் விடுதி திறக்கப்பட்டு மருந்தும் உணவும் வழங்கப்பட்டுவருகிறது. 2,00,000 இந்திய மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவிடம் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து கேட்டறிந்தார். இந்த பிரத்யேக பேட்டியில், இந்தியா, அமெரிக்கா மருத்துவத் துறையில் ஒன்றிணைந்து செயல்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் நோய்க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உலகளவில் இந்தியாதான் அதிகம் தயாரிக்கிறது. அமெரிக்காவிற்கு இந்த மருந்தை வழங்கி இந்தியா உதவி செய்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 50 நாடுகளுக்கு வரத்தக ரீதியிலும் மனித நேய அடிப்படையிலும் இந்தியா மருந்து வழங்கியுள்ளது. விசா குறித்த பிரச்னைகளை தீர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்திவருவதாக சாந்து தெரிவித்தார். அதன் முழு பேட்டி இதோ உங்களுக்கு...

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு உதவி அளிக்கப்பட்டுவருகிறது, விசா குறித்த பிரச்னைகள் ஆலோசிக்கப்பட்டுவருகிறது - அமெரிக்க தூதர்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்குவதை பெருமையாக நினைக்கிறோம் - சாந்து

  • அமெரிக்காவில் நிலவும் சூழ்நிலை குறித்து தெரிந்து கொள்ளவிரும்புகிறோம், ஊரடங்கு காலமான தற்போது எவ்வளவு இந்தியர்களுக்கு உதவி செய்துள்ளீர்கள்?

50 மாநிலங்களில் 6.32 லட்சம் பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் நியூயார்க் நகரில் மட்டும் 33 விழுக்காட்டினர் உள்ளனர். மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் ஊரடங்கை மதித்து வீட்டில் உள்ளனர். இந்தியர்களை பொறுத்த வரை, 2,00,000 மாணவர்கள் அமெரிக்காவில் சிக்கி தவித்துவருகின்றனர். 1,25,000 பேர் H1B விசா வைத்துள்ளனர். 6,00,000 பேரிடம் குடும்பை அட்டை உள்ளது. இதனை தவிர, சுற்றுலாவாசிகளும் அங்கு உள்ளனர். முதல் நாளிலிருந்தே தூதரகமும் தூதர்களும் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர். நாட்டில் உள்ள பெரும்பாலான இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம்.

  • இந்தியர்களுடன் குறிப்பாக மாணவர்களுடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள்?

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தொடர்பு கொள்கிறோம். கரோனா வைரஸ் நோயை பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த அந்நாளிலிருந்தே நாடு முழுவதும் உள்ள தூதரங்களில் 24/7 உதவி மையங்களை அமைத்து உதவி செய்துவருகிறோம். மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக குழு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் 50,000 மாணவர்களை தொடர்பு கொள்ளலாம். ஏப்ரல் 11ஆம் தேதி அன்று, இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் 25,000 மாணவர்களை தொடர்பு கொண்டோம். இந்தியர்களுக்கு 20 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகிறது. பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டதன் மூலம் அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு உதவி செய்தோம்.

  • தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்ல உதவுமாறு பல இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு எப்படி உதவி செய்து வருகிறீர்கள்? அவர்களுக்கு எம்மாதிரியான ஆலோசனையை கூற விரும்புகிறீர்கள்? இந்த பேரிடர் காலத்தில், எம்மாதிரியான உதவியை அவர்கள் நாடுகின்றனர்?

மாணவர்களுக்கு நேரடி உதவி வழங்கப்பட்டுவருகிறது. முதலில், மருத்துவர்களை தொடர்பு கொண்டு மருத்துவ வசதி வழங்கப்பட்டுவருகிறது. எடுத்துக்காட்டாக கொலராடோ மாகாணத்தில் இந்திய குடும்பத்திற்கு மருத்துவ வசதி தேவைப்பட்டது. உள்ளூர் மருத்துவர்களை தொடர்கொண்டு அவர்களுக்கான உதவியை செய்து கொடுத்தோம். பலர் தங்கும் இடம் இன்று தவித்து வருகின்றனர். பல்கலைக்கழகங்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தனியறை வழங்க கேட்டுக் கொண்டோம். விடுதி உரிமையாளர்களாக இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களை தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருப்பிடம் வழங்கி உதவி செய்தனர். பல அமெரிக்க வாழ் இந்தியர்கள் தானாக முன்வந்து உதவி செய்தனர்.

  • நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா கரோனாவுக்கு எதிராக எப்படி போர் தொடுக்கிறது?
    அமெரிக்காவுக்கான இந்திய தூதர்

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை, இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பு தந்து செயல்பட்டுவருகின்றன. உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனாவுக்கு எதிராக பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். இரு நாடுகளில் உள்ள மருத்துவ நிறுவனங்களும் நெருக்கமாக செயல்பட்டுவருகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு அமெரிக்காவில் பெரிய அளவில் தேவை உள்ளது. அதனை தயாரிக்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றும். அதில் பெருமை கொள்கிறோம். நோய் கண்டறியும் உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை பெற இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவுடன் தொடர்பில் உள்ளது.

இதையும் படிங்க: விமானப் போக்குவரத்துக்கான முன்பதிவை நிறுத்தவேண்டும்: விமான போக்குவரத்து இயக்குநரகம்!

ABOUT THE AUTHOR

...view details