தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தங்கத் தட்டில் உணவருந்துகிறாரா ட்ரம்ப்? - America president trump golden plate

டெல்லி: இந்தியா வரும் அதிபர் ட்ரமப், அவரது மனைவி மெலனியாவுக்கு உணவருந்துவதற்காக தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட பிரத்யேகமான சமையலறைப் பொருள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

golden plate, தங்க தட்டு
golden plate

By

Published : Feb 23, 2020, 2:26 PM IST

Updated : Feb 23, 2020, 2:38 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் என குடும்பத்துடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

ட்ரம்ப் வருகையையொட்டி அகமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களில் ஏற்பாடுகள் விருவிருப்பாக நடைபெற்று வரும் சூழலில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த புபுவால் என்ற வடிவமைப்பாளர் அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு தங்கம், வெள்ளிலானான பிரத்யேக சமையலறைப் பொருள்களை வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து புபாவால் பேசுகையில், "அதிபர் ட்ரமப், அவரது மனைவிக்கென விஷேஷமான சமையலறைப் பொருள்களை வடிவமைத்துள்ளேன். இவை 'ட்ரம்ப் கலெக்சன்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. 2010, 2015ஆம் ஆண்டுகளில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒமாபா இந்தியா வந்திருந்தபோது இதேபோன்ற விஷேஷ பொருள்களை அவருக்குப் பரிசளித்தோம்.

அடிப்படையில் செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களால் வடிவமைக்கப்படும் இந்தப் பொருள்களின் மீது, சுத்த தங்கம் அல்லது வெள்ளியால் கோட்டிங் கொடுக்கப்படும். இதனைச் செய்ய வேண்டும் என மூன்று வாரங்களுக்கு முன்னர் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் அதிபர் ட்ரம்ப் தங்குகையில் இவற்றைப் பயன்படுத்தவார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : 'நேற்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்...' - மைதானத்திற்குள் ராஜநடை போட்ட குவாடன்!

Last Updated : Feb 23, 2020, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details