டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாகக் காணப்படுகிறது. பிற்பகல் மூன்று மணிவரை 41 விழுக்காடு அளவே வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு அம்மாநில முதலமைச்சர் கேஜ்ரிவால் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், “டெல்லியில் வாக்குப்பதிவு மந்தமாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே வாக்காளர்கள் ஆர்வத்துடன் முன்வந்து வாக்களிக்க வேண்டும். குறிப்பாக பெண் வாக்காளர்கள் அதிகளிவில் முன்வந்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.