பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஜோதி, விபத்தில் காயமடைந்த தனது தந்தையைச் சொந்த ஊருக்கு 1200 கி.மீ சைக்கிளிலே அழைத்துச் சென்றார். இச்செய்தியை பார்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், சிறுமிக்கு தனது பாராட்டுகளை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதுமட்டுமின்றி, இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (Cycling Federation of India(CFI)) சார்பாக அச்சிறுமிக்கு பயிற்சி வழங்கவும் முடிவு செய்து அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சிறுமி ஜோதி ஈடிவி பாரத்துக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், "சி.எஃப்.ஐ ஒரு சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்திருந்தது. நானும் அதற்கான பயிற்சிக்கு அடுத்த மாதம் செல்லவுள்ளேன். எனக்கு சி.எஃப்.ஐ வாய்ப்பு வழங்கியது மட்டுமின்றி கல்விக்கான செலவுகளையும், இதர செலவுகளையும் கவனித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனது அக்காவுக்கு பள்ளியில் அரசின் 'பாலிகா சைக்கிள் யோஜ்னா' (Balika Cycle Yojna) திட்டத்தின் கீழ் சைக்கிள் வழங்கப்பட்டது. நான் அந்த சைக்கிளை ஓட்டிதான் கற்றுக்கொண்டேன். இதற்கு, எங்கள் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு தான் நன்றி கூறுகிறேன். தற்போது, அரசு கரோனாவுக்காக வழங்கிய ஆயிரம் ரூபாய் நிதியை கொண்டும் புதிய சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், அச்சிறுமிக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சார்பாக ஒரு லட்சம் ரூபாயும், ஜான் ஆதிகர் கட்சியின் தேசியத் தலைவர் பப்பு யாதவ் சார்பாக ரூ. 20 ஆயிரமும் வழங்கினர். பிரபாத் தாஸ் அறக்கட்டளை ஜோதிக்கு 'மிதில வீரங்க சம்மன்' (Mithila Veeranga Samman) என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தனர்.
இதையும் படிங்க:தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற சிறுமி - இவாங்கா ட்ரம்ப் நெகிழ்ச்சி