தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்வான் பள்ளத்தாக்கை சீனா சொந்தம் கொண்டாடுவது புதிதல்ல; முன்பு இருந்த நிலை மீளுமா என்பது சந்தேகமே – எம்.ஐ.டி பேராசிரியர்

கல்வான் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியையும், ஆற்று வளைவு வரை, சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வந்துள்ளது. சீன அரசின் மிக சமீபத்திய வரைபடங்கள்கூட எந்த மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் தற்போது மோதல் நிகழ்ந்த இடத்திற்கும் 40 கிமீ அப்பால் உள்ள பல்வேறு பகுதிகள் 1962 போரில் பிரதானமாக இருந்தன.

எம்.ஐ.டி பேராசிரியர்
எம்.ஐ.டி பேராசிரியர்

By

Published : Jul 13, 2020, 11:53 PM IST

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியுள்ள நிலையில், லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு முழுமைக்கும் சீனா உரிமை கோருவது ஒன்றும் புதிதல்ல, சீன அரசின் பழைய வரைபடங்கள் இதனை தெளிவாகக் காட்டுகின்றன என்று தெரிவிக்கிறார் சீனா பற்றிய புகழ்பெற்ற ஆய்வாளர், டெய்லர் ஃப்ரேவெல். கல்வான் நதியின் கழிமுகம் அல்லது ஆற்று வளைவு வரை தனது எல்லை என்ற பெய்ஜிங்-ன் நிலைப்பாட்டில் தற்போதுவரை மாற்றம் ஏதும் இல்லை என்று கூறுகிறார் அமெரிக்காவின் எம்.ஐ.டி-யில் (Massachusetts Institute of Technology) பேராசிரியரான ஃப்ரேவெல்.

ஆனால், இதனை செயல்படுத்த எல்லைப்பகுதியில் சீன ராணுவ எடுக்கும் நடவடிக்கைகள் முன்புபோல இல்லாமல், சற்று தீவிரம் பெற்றுள்ளது. தற்போதைய ஊடுருவலுக்கு முன்பு இருந்த நிலைமை திரும்ப, சீனா பின்வாங்க, வாய்ப்பில்லை என மூத்த பத்திரிக்கையாளர் ஸ்மிதா ஷர்மா-உடனான தொலைபேசி வழியான நேர்கானலில் அவர் விளக்குகிறார். மேலும், இந்திய-சீன எல்லைப் பதற்றம் இன்னும் மோசமடைந்தால் அவரது பார்வையில் எந்த அளவு இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கும் என்பதும் தெளிவற்றதாகவே உள்ளது. மேலும், அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ உறவை வைத்துக்கொள்வதை இந்தியா முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை, சீனாவுடன் உள்ள உறவு மற்றும் இந்தியாவுடனான இராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். முக்கியமான பெரிய நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளில் ரஷ்யா நடுநிலை வகித்து வந்ததே கடந்த கால வரலாறு.

அமெரிக்காவுடன் உள்ள மோதலும் முரனும் தீவிரம் அடைந்துவரும் சூழலில், இந்தியாவுடனான உறவு மேலும் மோசமடைய விரும்பாத சீனா சமரச மனநிலைக்கு இறங்கி வந்துள்ளது தெரிகிறது. இருப்பினும், இந்தியாவைச் சீண்ட பூட்டான், நேபாளம் போன்ற அண்டை நாடுகளுடன் புதிய எல்லை தாவாக்களை சீனா எழுப்புவதைக் குறித்து டெல்லி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கல்வான் பள்ளத்தாக்கை சீனா சொந்தம் கொண்டாடுவது புதிதல்ல - எம்.ஐ.டி பேராசிரியர்

கேள்வி: லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் படைகளை விலக்கிக்கொள்வதாக முடிவெடுத்து அதனை மெதுவாக செயல்படுத்தி வருகின்றன. இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீன ஊடுருவல் குறித்த உங்கள் கருத்து என்ன?

இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளையும் செயற்கைக்கோள் புகைப்படங்களையுமே நாம் நம்பியிருக்கிறோம். களத்தில் உள்ள நடப்பு எல்லைக்கோட்டை சர்வதேச எல்லையாகக் கொண்டாலும், எல்லைமீறி ஊடுருவியதுசெயல்பட்டது என்பது சிக்கலான ஒன்றுதான். ஏனென்றால், ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லை என்பது களத்தில் இல்லை. எல்லை குறித்த இரு நாடுகளின் பார்வையும் மாறுபட்டது. இருப்பினும், குறைந்தது மூன்று இடங்களில் – கல்வான் பள்ளத்தாக்கு, வெந்நீர் ஊற்று, பாங்காங் ஏரி – தனது எல்லை என கருதும் நிலைகள் வரை துருப்புகளை காலூன்ற சீனா முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இவை இந்திய எல்லைக்குள் ஊடுருவல் என இந்தியா திடவட்டமாகக் கருதுகிறது.

இதில் பாங்காங் ஏரியின் 4 முதல் 8 வரையான விரல் பகுதி எல்லை தெளிவற்றது. இந்தியாவின் பார்வையில், அதன் எல்லை 8வதுவிரல் பகுதி வரையும், சீனாவின் பார்வையில், அதன் எல்லை 4வதுவிரல் பகுதி வரையிலும் உள்ளது. இதனைவிட சிக்கலானது கல்வான் பள்ளத்தாக்கு, குறிப்பாக கல்வான் ஆறு, ஷயோக் ஆற்றுடன் கலக்கும் முன் உள்ள வளைவு. கல்வான் ஆற்று வளைவில் இருந்து தென் கிழக்காக 1 கிமீ-க்கு அப்பால் எல்லைஉள்ளது என்கிறது இந்தியா. ஆனால், அந்த வளைவை ஒட்டி உள்ளதென்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால், நமக்குகிடைத்த தகவல்கள்படி, சீனா எல்லையைக் கடந்து ஊடுருவியுள்ளது.

கேள்வி: கல்வான் பகுதி சீனாவின் இறையான்மைக்கு உட்பட்டது என்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

கல்வான் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியையும், ஆற்று வளைவு வரை, சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வந்துள்ளது. சீன அரசின் மிக சமீபத்திய வரைபடங்கள் கூட எந்த மாற்றத்தையும் கொண்டிருக்க வில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் தற்போது மோதல் நிகழ்ந்த இடத்திற்கும் 40 கிமீ அப்பால் உள்ள பல்வேறு பகுதிகள் 1962 போரில் பிரதானமாக இருந்தன. சீன அரசு இணையதளங்கள் கல்வான் கழிமுகம் வரை எல்லை உள்ளதென தெரிவிக்கின்றன. எனவே, கல்வான் பள்ளத்தாக்கு என்பது குறித்த இரு நாடுகளின் பார்வையும் ஒன்றல்ல.

கேள்வி: அப்படி என்றால், கல்வான் பிரச்சனையை ஒரு உத்தியாக சீனா கையில் எடுத்துள்ளதா?

சீனாவின் போக்கில் மாற்றம் உள்ளது. ஷயோக் நதி வரையிலான 5 கிமீ பரப்புக்கு சொந்தம் கொண்டாடுவதுடன், கல்வான் ஆற்று வளைவில் நிலை கொண்டுள்ளது. உரிமை கொண்டாடினாலும், அடிக்கடி ரோந்து மேற்கொண்டதா என்பது பற்றித் தெளிவில்லை. இருப்பினும், இந்திய ஊடகங்கள் அபாய சங்கை ஊதுகின்றன. வரைபடங்களில் குறிப்பிட்டு உரிமை கோருவதற்கும், அதனை நில்லைநாட்ட தீவிரமாக செயல்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

தனது எல்லை கல்வான் ஆற்று வளைவுடன் முடிவதாக, சீன அரசின் அறிக்கைகள் தெரிவிப்பதில் இருந்து, ஜூன் 6 முடிவான படை விலக்கத்தையும் அது தோல்வி அடைந்ததையும் புரிந்துகொள்ளலாம். ஆற்றின் அல்லது கழிமுகத்தின் இரு பகுதியிலும் தங்களது புறக்காவல் நிலையத்தை அமைத்துக் கொள்ளலாமென சீன தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

கேள்வி: அணைத்து கட்சிகூட்டத்திற்குப் பின்னர் பிரதமரின் பேச்சினை, சீனா தனது நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என காட்ட முயற்சித்தது. பிரதமரின் பேச்சு குழப்பத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தியதாக கருதுகிறீர்களா?

குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. காரணம், எல்லைதான் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்றாலும், களத்தில் அது எங்கு இருக்கிறது என அறுதியிட்டு சொல்ல இயலாத சூழல். கல்வான் ஆற்றுவலைவை சீனா தாண்டவில்லை. அதுதான், அவர்கள் சொந்தம் கொண்டாடும் எல்லை. பிரதமருடைய பேச்சின் அர்த்தம் புரிந்தாலும், சீன அரசுக்கும் அதன் வெளியுறவுத் துறைக்கும் அது பேசுபொருளானது. அவர்கள் வாதத்திற்கு வலு சேர்க்க, சீன தொலைக்காட்சியான சிசிடிஎன் விவாதம் ஒன்றில் பிரதமரின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது.

கேள்வி: இரு தரப்புக்கும் இடையான பொதுப் பகுதி (buffer zone) குறித்த குழப்பம் நீடிக்கிறதே. அது மாற்றப்பட்டுள்ளதா அல்லது இந்தியாவுக்கு இழப்பா?

இரு தரப்பும் 1.5 கிமீ தொலைவுக்கு விலக்கிக் கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதில் முக்கியமான கேள்வி என்னெவென்றால், எங்கிருந்து என்பதுதான். கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா கருதும் எல்லையில் இருந்தா அல்லது சீனா கருதும் பகுதியில் இருந்தா?

முந்தைய படை விலக்க நடைமுறை செயல்பாடுகள் தோல்வி அடைந்ததற்குக் காரனம், இரு படைகளும் மிக அருகில் நெரெதின் நின்றதுதான். மேலும், யார் எங்கிருக்க வேண்டுமென்பதில் இருந்த குழப்பம். இந்த பொதுப் பகுதி நல்லதுதான். இரு தரப்பும் தங்கள் நிலைகளில் இருந்து 3 கிமீ தொலைவுக்கு ரோந்து செல்லாமல் இருப்பது, களத்தில் சிக்கல் வராமலிருக்க உதவுவதுடன், அரசியல் மற்றும் தூதரக அளவில் பிரச்சனைகளை தீர்க்க ஏதுவாக அமையும்.

கேள்வி: இரு நாட்டு அறிக்ககைகளிலும் பழைய நிலைக்குத் திரும்புவது என்பது விடுபட்டுள்ளதை என்பதை முன்னாள் வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் சுட்டிக்காட்டியுள்ளார். இது கவலைக்குறிய ஒன்றா? ஏப்ரல் மாதத்தில் களத்தில் இருந்த பழைய இருந்த நிலைக்கு மீள்வது எவ்வளவு காலமாகும்?

முழுமையாக பழைய நிலைக்கு மீள்வது என்பது சந்தேகமே. காரணம், பழைய நிலை என்ன என்பதே தெளிவில்லாத ஒன்று. பாங்காங் ஏரியின் 4வது விரல் பகுதியில் நிரந்தரமாக நிலைகொள்ள, சீனா கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. பழைய நிலைக்கு மீள்வது என்றால், அந்த கட்டமைப்பு வசதிகளையும் சீன துருப்புகளையும் நீக்க வேண்டும். கல்வான் பகுதியிலும், பழைய நிலை என்பதில் இதே சிக்கல் தான். எல்லை மீட்சி என்பது இரு தரப்பும் ஒத்துக்கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், இரு தரப்பு அறிக்கைகளில், இது குறித்து எதுவும் இல்லை. சீனா வெளியிட்ட அறிக்கையில், நடந்தவற்றில் எது சரி அல்லது தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமரச தொனி இருந்தாலும், சீனா தனது உரிமையை மீண்டும் உறுதிப்படுத்த தவறவில்லை. அமெரிக்காவுடன் உள்ள மோதல் முற்றியுள்ள பின்னணியில், தற்போதைக்கு இந்த பிரச்சனையை தீவிரப்படுத்தி, இந்தியாவுடனான உறவை மேலும் சீர்குலைக்க சீனா விரும்பவில்லை.

கேள்வி: இந்திய – சீன பிரச்சனை இன்னும் தீவிரம் அடைந்தால், அமெரிக்கா எந்த அளவிற்கு இந்தியாவிற்குத் தோள் கொடுக்கும்?

சீனாவுடன் போட்டி மற்றும் சீன எதிர்ப்பு காரணமாக, அமெரிக்கா இந்தியாவுக்குத் துணை நிற்கும் என்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது. எல்லையில் நிலவும் சூழல் மோசமடைவதைப் பொறுத்தும், அமெரிக்கத் தலையீட்டை இந்தியா விரும்புவதைப் பொறுத்தும் அது அமமையும். சீன விவகாரங்களில் அமெரிக்காவிற்குத் தோள் கொடுத்தால், அமெரிக்கவும் இந்தியாவுக்குத் தோள்கொடுக்கும். இந்திய அமெரிக்க உறவு இன்னும் மேம்படும்.

கேள்வி: இந்திய சீன பிரச்சனையில், ரஷ்யாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

ராணுவ தளவாடங்களுக்கு, இந்தியா ரஷ்யாவை பெருமளவு சார்ந்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து பெறுபவற்றில் பல சீன எல்லையில் தேவைப்படுபவை. ஆனால், இந்த பிரச்சனையில் தலையிட மாஸ்கோ விரும்பவில்லை. 1962ல் சீன ஆக்கிரமிப்பின் போதும் சோவியத் ரஷ்யா நடுநிலை வகித்தது. வரலாறு காட்டுவதும் அதுவே. தான் நல்லுறவு கொண்டுள்ள இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை எதிலும் ரஷ்யா தலையிட்டதில்லை.

ஆனால், சுமூகமற்ற அமெரிக்க – ரஷ்ய உறவு இன்னும் மோசமடைந்தால், அது இந்தியாவுக்கும் சில விதங்களில் பாதிப்பு ஏற்படுத்தும்.

கேள்வி: செயற்கைக் கோள் புகைப்படங்கள் வழியாக ஒரு யுத்தமே நடைபெறுகிறது. சீன எல்லையில் இராணுவக் குவிப்பும், சீனா அண்டை நாடுகளிலும் எல்லைப் பிரச்சனையைக் கையிலெடுப்பது ஏன்? குறிப்பாக பூட்டானின் செட்காங் சரணாலயம். இது, அண்டை நாடுகளை இந்தியவுக்கு எதிராகத் திருப்பும் முயற்சியா?

நிச்சயமாக, இந்தியா – பூட்டான் உறவில் விரிசலை எற்படுத்த முயலும் சீனாவின் திட்டமே இது. இந்த சரணாலயம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிய சீனா, அதனைக் 1990ல் கைவிட்டது.

ஆனால், இந்தியாவைவிட, சீனாவின் தலைவலி அமெரிக்காதான். பரந்துபட்ட ராணுவ நோக்கில், உலக அரங்கில் தன்னை முதன்மைப்படுத்தவும், அமெரிக்காவுடன் உறவுதேவை. பாரம்பரியமாக, வரலாற்று ரீதியாக, இந்தியாவுடனான உறவை முக்கியமானதாகவே கருதி வந்தாலும், அமெரிக்காவுடனானது போன்றது அல்ல. அதனால்தான், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையில் இந்தியாவின் கை ஓங்குவதை சீனா தடுக்க முனைகிறது. இதற்கு மற்றுமொரு காரனம், திபெத்-ஐ, சின்ஜியாங் தொடங்கி சீனாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலை குறித்த அச்சமும் கவலயும் ஆகும். இருப்பினும், சீனா அதிகப்படியான பொருளையும் காலத்தையும் செலவிட்டு, இந்தியாவுடன் உள்ள உறவை சீர்செய்து அமெரிக்க உறவைக் கைவிடத் தயாரில்லை. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை தெளிவு படுத்தியுள்ளார். இது எதனைக் காட்டுகிறது என்றால், இந்தியாவைச் சீண்டுவதும், பூட்டான், நேபாளம் போன்ற அண்டை நாடுகள் வழியாக எல்லையில் சிக்கல் தருவதும், தன்னை வலுப்படுத்திக் கொண்டு, அமெரிக்கா மீது தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டியே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி: சரியான பாதையில் செல்கிறதா இந்தியா?

ABOUT THE AUTHOR

...view details