தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பார் உரிமையாளரை தாக்கிய கலால் துறை அலுவலர்கள் - பார் உரிமையாளரை தாக்கிய கலால் துறை அலுவலர்கள்

கர்நாடகா: ஹுப்ளியில் மதுபான கடையை ஆய்வு செய்யச் சென்ற கலால் துறை அலுவலர்கள் அந்தக் கடையின் உரிமையாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

excise department officer assaults bar owner
excise department officer assaults bar owner

By

Published : Feb 6, 2020, 8:19 PM IST

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் உள்ள கர்வார் சாலை அருகே தனியார் மதுபான பார் மற்றும் விடுதி இயங்கிவருகிறது. இதனிடையே இந்த பாரில் ஆய்வு நடத்துவதற்காக கலால் துறை அலுவலர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது ஆய்வின் முடிவில், பார் உரிமையாளரான ஸ்ரீனிவாச ஜித்தூரியிடம் பணம் செலுத்துமாறு காவல் அலுவலர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு பார் உரிமையாளர் தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால் பணம் செலுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து லஞ்சமளிக்க மறுத்த பாரின் உரிமையாளரை காவல் துறை அலுவலர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது.

தன்னைத் தாக்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரின் உரிமையாளர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: காவலர் சீருடையில் வசூல் வேட்டை நடத்தியவர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details