முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி கன்டோன்மண்ட் பகுதியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இத்தருணத்தில் அவரின் உடல்நிலை தொடர்ந்து இரண்டு வாரங்களாக மோசமடைந்து வந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இச்சூழலில், நீண்ட நாட்களாக சுயநினைவின்றி இருந்த அவரின் உடல்நிலை இன்று மிகவும் மோசமடைந்தது. அவரின் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக மகன் அபிஜித் முகர்ஜி தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 84 ஆகும்.
2019ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய வெளியுறவுத் துறை, நிதித் துறை, பாதுகாப்புத் துறைகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழ் இருக்கும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்:
குடியரசு தலைவராக பொறுப்பேற்று ஒரே ஆண்டில், அலுவலகத்தை ஜனநாயகப்படுத்தும் வகையிலான பல அறிவிப்புகளை பிரணாப் வெளியிட்டார். 'மேதகு' என குடியரசுத் தலைவரை அழைக்க வேண்டாம் என உத்தரவிட்டார். ஆளுநர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதுபோன்ற பிரணாப்பின் எண்ணற்ற சாதனைகள் குறித்து இச்சிறப்பு தொகுப்பில் காணலாம்.
பிரணாப் முகர்ஜியிடம் ஏதேனும் ரகசியங்களை தெரிவித்தால், அது அவரிமிருந்து வெளியே வர வாய்ப்பில்லை. குழாய் மூலம் புகைக்கும் புகை மட்டுமே அவர் வாயிலிருந்து வெளியே வரும் என பிரணாப் குறித்து அடிக்கடி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூறுவார்.
வரலாற்றில் முதல்முறையாக ஒரு குடியரசு தலைவர் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்று கொடுத்தது இவர் காலகட்டத்தில்தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தாரோ, அதையேதான் தனது பதவிக்காலத்திலும் பிரணாப் செய்தார். குடியரசு தலைவர் மாளிகையில், ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பிரணாப் பாடம் எடுத்தார்.
ஆசிரியர், வழக்குரைஞர், அமைச்சர், ஜனாதிபதி என எப்படிப் பார்த்தாலும் அரசியல் வாழ்கையில் அவர் ஒரு சகாப்தம், பிரணாப் முகர்ஜி வாழ்க்கை குறித்த சுவாரசிய தகவல்கள் இதோ!
அதற்கு முன்பு வரை, பிரதமரின் மரணம் இயற்கையாக அமைந்தது. ஆனால், அப்போது, பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார். இம்மாதிரியான சூழலில், அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டன. எனவே, மேற்கு வங்கத்திலிருந்து டெல்லிக்கு திரும்பி கொண்டிருந்த நானும் மற்ற காங்கிரஸ் பிரமுகர்களும் ராஜிவ் காந்தியை பிரதமராக முன்மொழியலாம் என முடிவு எடுத்தோம்.