உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், இன்று வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தாரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் ராங்கியா பகுதியில் பல ஆண்டுகளாக அவரின் குடும்பத்தார் வாழ்ந்துவருகின்றனர்.
குடியுரிமையை இழந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பம்! - முன்னாள் குடியரசு தலைவர்
திஸ்பூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தாரின் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஃபக்ருதீன் அலி அகமது மூத்த சகோதரரின் குடும்பம் தேவையான தரவுகளை அளிக்கத் தவறியதால், தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. இதனால், ஃபக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தாரால் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே முன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் இந்திய குடியுரிமையை இழந்துள்ளனர். 1974ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர் ஃபக்ருதீன் அலி என்பது குறிப்பிடத்தக்கது.