புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் (78). 1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதலமைச்சராக இருந்த இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சிகிச்சைபெற்று வந்தார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் மறைவு - நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் இன்று காலமானார். அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கடந்த வாரம் இவரது உடல்நிலை மோசமானதால் புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை திமுக எம்பி கனிமொழி ஜூன் 7ஆம் தேதி சந்தித்து உறவினர்களிடம் உடல்நலம் விசாரித்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் காலமானார். அவரது உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.