தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 1994ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
இந்த நிகழ்வின் போது பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் உடனிருந்தார். ராஜசேகர் ரெட்டி நந்திகோட்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அதன் பின்னர் நடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவினார்.
இதையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெளியேறினார். ராயலசீம பரிரக்ஷனா சமிதி (Rayalaseema Parirakshana Samithi (RPS)) என்ற அரசியல் இயக்கத்தை தோற்றுவித்து வழிநடத்தி வந்தார். தற்போது பாஜகவில் தன்னை இணைத்து விட்டார்.
தெலுங்கு தேசம் முன்னாள் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்.! - Rajasekhar Reddy joins BJP
டெல்லி: தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் (எம்.எல்.ஏ.) ராஜசேகர் ரெட்டி பாஜகவில் இணைந்தார்.
![தெலுங்கு தேசம் முன்னாள் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்.! Ex-MLA Byreddy Rajasekhar Reddy joins BJP](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5216051-thumbnail-3x2-tds.jpg)
Ex-MLA Byreddy Rajasekhar Reddy joins BJP
இதையும் படிங்க: சித்த ராமையா, குமாரசாமிக்கு, கர்நாடக முதலமைச்சர் எச்சரிக்கை.!
TAGGED:
Rajasekhar Reddy joins BJP