விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்ற நிலையில், தி வன்னி தமிழ் மக்கள் சங்கம் என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தத் தகவலை கட்சியின் ஊடக செய்தித் தொடர்பாளர் எம்.ஏ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த அரசியல் கட்சி யாழ்ப்பாணம், வன்னி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடுகிறது. பிராந்தியத்தில் இளைஞர்களின் பங்களிப்புடன் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது, வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவது கட்சியின் நோக்கம்” என்றார்.
மேலும், “கிழக்கு மாகாணங்களில் மக்களின் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வுகள் ஏற்பட்டாலும், வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் தனிப்பட்ட நலனுக்காகச் செயல்படுகின்றன. குறிப்பாக வன்னிப் பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அப்படியே உள்ளன” என்றார்.