தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி பாஜக தலைவர்களுடன் ரகுபர் தாஸ் சந்திப்பு - ஜார்க்கண்ட் தேர்தல் தோல்வி

டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை இழந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

Ex Jkhand CM Raghubar Das meets Om Mathur and B.L. Santhosh in Delhi
Ex Jkhand CM Raghubar Das meets Om Mathur and B.L. Santhosh in Delhi

By

Published : Dec 29, 2019, 10:45 PM IST

ஜார்கண்ட் மாநிலத்துக்கு நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் 47 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

ஆளும் கட்சியான பாஜகவுக்கு 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிட்டியது. அந்தவகையில் பாஜகவுக்கு சறுக்கலை ஏற்படுத்திய ஐந்தாவது மாநிலம் ஜார்கண்ட் ஆகும்.

இந்த நிலையில் பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ரகுபர் தாஸ் டெல்லியில் பாஜக தலைவர்களை சனிக்கிழமை (டிச.28) சந்தித்துப் பேசினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக ஜார்கண்ட் தேர்தல் பாஜக பொறுப்பாளர் ஓம் பிரகாஷ் மாதுரை சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து பாஜக பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிவரை நடந்துள்ளது. இதேபோல் உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் முக்கியத் தலைவர்களையும் ரகுபர் தாஸ் சந்தித்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ABOUT THE AUTHOR

...view details