மத்திய அரசு தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அத்தியாவசிய பொருள்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதா உள்ளிட்ட விவசாயம் சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தத் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச வருமானம்கூட பாதிக்கப்படும் என்று பஞ்சாப், ஹாரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் விவசாயிகள் மசோதா 2020க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், " மக்களவையில் நிறைவேற்றிய இரண்டு விவசாய விளைபொருள் விற்பனை மசோதாக்களை இன்று மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முனைகிறது.