தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் முதலமைச்சர் உடலுக்கு நாராயணசாமி மரியாதை - janakiraman

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடலுக்கு மாலை அணிவித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார்.

Narayanasamy

By

Published : Jun 10, 2019, 1:42 PM IST

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் (78). உடல்நிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவரது உடல்நிலை மோசமானதால் புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை திமுக எம்பி கனிமொழி ஜூன் 7ஆம் தேதி சந்தித்து உறவினர்களிடம் உடல்நலம் விசாரித்தார்.

ஜானகிராமன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை

இந்த நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்’ என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details