தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு இல்லத்தை மூன்றே நாட்களில் காலி செய்த ரஞ்சன் கோகாய் - அரசு இல்லத்தை மூன்றே நாளில் காலி செய்த ரன்ஜன் கோகாய்

டெல்லி: சமீபத்தில் பணி ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தான் குடியிருந்த அரசு இல்லத்தை மூன்றே நாட்களில் காலி செய்துள்ளார்.

ரன்ஜன் கோகாய்

By

Published : Nov 22, 2019, 12:12 PM IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 17ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவரது அரசு இல்லத்தை காலி செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. எனினும், அவர் மூன்றே நாட்களில் அந்த இல்லத்தை காலி செய்துள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு அரசு மாற்றாக வழங்கிய 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவிற்கு ரஞ்சன் கோகாய் செல்கிறார். இதேபோல், முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹரும் ஒரே வாரத்தில் தனது இல்லத்தை காலி செய்தார்.

அயோத்தி வழக்கில் முக்கிய தீர்ப்பை அளித்துவிட்டு தனது பணியில் இருந்து நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றுள்ளார். அவரைத்தொடர்ந்து, நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தனது கடைசி வேலை நாளில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்றாம் எண் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் ரஞ்சன் கோகாய் அமர்ந்தார். அந்த சமயத்தில் அவருக்கு உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் மரியாதை செலுத்தினர்.


இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானார் எஸ்.ஏ.பாப்டே!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details