தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் - புத்ததேப் பட்டாச்சார்ஜி உடல்நிலை

கொல்கத்தா: உடநலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்ஜியின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Buddhadeb Bhattacharya
Buddhadeb Bhattacharya

By

Published : Dec 12, 2020, 3:51 PM IST

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான புத்ததேப் பட்டாச்சார்ஜி(76) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முதல் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நநிலை அபாய கட்டத்திற்கு சென்றதால், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கொல்கத்தா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பட்டாச்சார்ஜி உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டுவருகிறது. கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு அவரது உடல்நிலை மோசமானது, ஆனால் இப்போது அவரது உடல்நிலை சீராகவே உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

76 வயதாகும் புத்ததேப் பட்டாச்சார்ஜி மேற்கு வங்கத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர். வயது மூப்பு காரணமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: 'நான் குடியரசு தலைவரான போதே, காங்., தலைமை அரசியல் கவனத்தை இழந்துவிட்டது' - பிரணாப் முகர்ஜி

ABOUT THE AUTHOR

...view details