ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களான இம்தியாஸ் அகமத், இப்ரார் அகமத், அப்ரார் அகமத் ஆகிய மூன்று இளைஞர்கள் கடந்த ஜூலை 17ஆம் தேதி முதல் காணவில்லை என அவர்களின் குடும்பம் புகார் அளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை ஆகஸ்ட் 9ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதேவேளை கடந்த மாதம் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்தவர்களுடன் ராணுவம் நடத்திய தாக்குதலில், மூவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டு இறந்திருக்கலாம் எனவும் புகார் எழுந்துள்ளது.